Friday, June 13, 2008

தோல்விகள்... தோல்விகளல்ல...

பூக்கள்
அழகு மாறாமல்
புன்னகைத்துக் கொண்டேயிருக்கின்றன
கல்லறையிலும்

விழுந்தாலும்
நதியாய் ஓடிக்கொண்டேயிருக்கிறது
அருவி

வெட்ட... வெட்ட
விடாமல் தழைகிறது
வேப்பமரம்

தலைகீழாய்ச் சாய்த்தாலும்
மேல்நோக்கியே எரிகிறது
நெருப்பு

புதைக்கப்பட்ட விதை
வெடித்துக் கிளம்பி
வெளி வருகிறது
ஆவேசமாய்

இறந்த சூரியன்
உயிர்த்தெழுந்து வருகிறது
மறுநாள்...
புத்துணர்ச்சியோடு

தோல்வியை
மீண்டுவரவே இயலாத
மரணமாகப் பார்ப்பது
மனிதநேயம் மட்டும்தான் !....

11 comments:

Unknown said...

Dear U know???? the life without challanges is nothing....

ur good poem tells to fight with life.........

fight is the good life.......thanks a lot for ur nice words

expecting more

Ever
Subash

சாம் தாத்தா said...

reegan,

அருமை!

அருமை!

அருமை!

வாழ்த்துக்கள்!

சாம் தாத்தா said...

இது போலவே நல்லா உபயோகமாவே எழுதுங்க.

அப்பிடின்னாதான் யாரும் எட்டிக் கூடப் பாக்க மாட்டாங்க.

(என்ன உலகம்டா சாமி!
இவ்வளவு அருமையான கவிதைக்கு ஒரே ஒரு கமெண்ட் தானா. அடச்சை.)

J J Reegan said...

// fight is the good life.......thanks a lot for ur nice words //


Thank u Subash...

Adikkadi vandhu ponga....

J J Reegan said...

// இது போலவே நல்லா உபயோகமாவே எழுதுங்க.

அப்பிடின்னாதான் யாரும் எட்டிக் கூடப் பாக்க மாட்டாங்க.

(என்ன உலகம்டா சாமி!
இவ்வளவு அருமையான கவிதைக்கு ஒரே ஒரு கமெண்ட் தானா. அடச்சை.)//

வாழ்த்தியதற்கு நன்றி தாத்தா...

Divya said...

\\தோல்வியை
மீண்டுவரவே இயலாத
மரணமாகப் பார்ப்பது
மனிதநேயம் மட்டும்தான் !....\\

ஆழமான அர்த்தங்கள் அனைத்தையும் இவ்வரிகளுக்குள் அழகா பதித்திருக்கிறீர்கள்,

சிந்திக்க வைக்கும் வரிகள், மிக அருமை !!

Aruna said...

A very good poem with inspiring words.....keep it up!!
anbudan aruna

J J Reegan said...

திவ்யா, அருணா

எனது நன்றிகள்...

Unknown said...

அருமையான கவிதை...!! :-)

Divya said...

ஹாய் ரீகன்,
நல்லாயிருக்கிறீங்களா??

எங்கே ரொம்ப நாளா ப்ளாக் பக்கமே காணோம்?

BTW.....Thanks for following my blog Reegan!

Unknown said...

தோல்வியை
மீண்டுவரவே இயலாத
மரணமாகப் பார்ப்பது
மனிதநேயம் மட்டும்தான் !...


மிக உண்மையான வரிகள்...!

நிறைய எழுதுங்கள்..அடிக்கடி..!