
எப்படி மறப்பது உன்னை...?
என் கண்ணாடி வீட்டில்
கல்லெறிந்து போயிருக்கிறது
உன் சிரிப்பொலி
என் ஈரநிலங்களில்
அழுத்தமாய் பதிந்திருக்கிறது
உன் பாதச் சுவடுகள்
பட்டப்பகலில் துணிகரமாய்
என்னை கொள்ளையடிதிருக்கிறது
உன் அழகு
எழுத்துக் கூட்டி படித்த
என்னை
கவிஞனாக்கியிருக்கிறது
உன் கண்கள்
என் பௌர்ணமிகளை
மொத்த விலைக்கு
வாங்கியிருக்கிறது
உன் முகம்
என் தியான வேளைகளிலும்
குறுக்கிட்டு
குழப்பியிருக்கிறது
உன் பெயர்
என் நந்தவனத்தில்
தீ வைத்திருக்கிறது
உன் அசைவுகள்
இப்படி
இப்படியேல்லாமிருக்க
எப்படி
மறப்பது உன்னை...?
10 comments:
So nice and painfull.....
it is happned to all people... but girls never understand...........
becoz no body understand their heart......
ever
S*Subash
// So nice and painfull.....
it is happned to all people... but girls never understand...........
becoz no body understand their heart......
ever
S*Subash //
அப்பிடி இல்லைங்க சுபாஷ்...
எப்பவுமே சரி...
காதல்
உருவாகறதும் சரி...
பிரியறதும் சரி...
சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் மட்டுமே நிர்ணயிக்கிறது...
அருமை:))
// Divya said...
அருமை:)) //
Thanx.
//என் தியான வேலைகளிலும்
குறுக்கிட்டு
குழப்பியிருக்கிறது
உன் பெயர்//
தியான வேளைகளிலும் என்றிருக்க வேண்டும்.
எழுத்துப் பிழை.
கவனிக்கவும் ரீகன்.
ஈரம் சுரக்கும் கவிகளுக்கு சொந்தக்காரனே
நீ வாழ்க!
//
Sam Thaththa...
adikkadi vandhu ponga....
//
//என் கண்ணாடி வீட்டில் கல்லெறிந்து போயிருக்கிறது உன் சிரிப்பொலி
என் ஈரநிலங்களில் அழுத்தமாய் பதிந்திருக்கிறது உன் பாதச் சுவடுகள்//
மனதில் பதிந்தன இந்த வரிகள்.
அன்புடன் அருணா
// மனதில் பதிந்தன இந்த வரிகள்.
அன்புடன் அருணா //
நன்றி அருணா...
மிக அழகான கவிதை..!! :-)
வாழ்த்துகள்..!!
// Sri said...
மிக அழகான கவிதை..!! :-)
வாழ்த்துகள்..!! //
உங்களோட முதல் வருகைக்கு நன்றி !...
Post a Comment