Thursday, June 12, 2008

எது நடக்கிறதோ.....

வானம் தரிசிக்கும் வாய்ப்பு
கிளைகளுக்குக் கிடைப்பது
இலையுதிர்காலத்தில்தான்

சர்வநிச்சயமாக உணரமுடியாது
நிழலின் அருமையை
வெயில் இல்லாவிட்டால்

பகலை காட்டிலும்
அதிகமாய் ரசிக்கத்தக்கது
இரவு

வெற்றி
ஒருவகையில் சிறைவாசம்
தோல்வி
ஒருவகையில் விடுதலை

வளர்ச்சியைப் போல
வறட்சியும் ஒரு அனுபவமே

செல்வம்
வசதியைக் கொடுக்கும்
வறுமைதான்
வாழ்க்கையை போதிக்கும்

ஆம் !
எது நடக்கிறதோ
அது நன்றாகவே நடக்கிறது...

5 comments:

Unknown said...

ur nice poems were practical........
expressing our life also........

expecting more

Ever
Subash

J J Reegan said...

// ur nice poems were practical........
expressing our life also........

expecting more

Ever
Subash //

Thanks Subash...

Aruna said...

//செல்வம்
வசதியைக் கொடுக்கும்
வறுமைதான்
வாழ்க்கையை போதிக்கும்//

rightly said....
well written. Keep it up!
anbudan aruna

J J Reegan said...

// rightly said....
well written. Keep it up!
anbudan aruna //

Thanks ARUNA

மங்களூர் சிவா said...

ஹாய் ரீகன் இப்பதான் உங்க பழைய கவிதை எல்லாம் படிச்சேன் எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கு.

நிறைய எழுதுங்க