Wednesday, June 11, 2008

ஒரு பனிக்காலைப் பொழுது....


மழையைப் போல்
ஆனால்
மௌனமாய் பெய்து கொண்டிருக்கிறது
பனி

இரவை வழியனுப்பும் பொருட்டோ
பகலை வரவேற்கும் பொருட்டோ
பாடிக் கொண்டிருக்கின்றன
பறவைகள்

மென்மையாய்
வெண்மையாய்
ஒளிர்ந்து கொண்டிருக்கிறது
கிழக்குக்கான சூரியன்

உற்றுக் கவனித்தாலொழிய
உணர முடியவில்லை
தாவரங்களின் நுண்ணிய அசைவினை

கோலத்தின் நடுவே
அதிசயமாய் பூத்திருக்கிறது
பூசணி பூக்கள்

நட்சத்திரங்கள்
மேகங்கள்
நிலா - என
எதுவுமற்று
வெறுமையாய் இருக்கிறது
நீ(ல)ள் வானம்

மனதின்
ஒவ்வொரு அடுக்குகளிலும்
உடலின்
ஒவ்வொரு அணுக்களிலும்
தெரிகிறது
ஒருஅபாரமான புத்துணர்ச்சி

இரவின் அமைதி கலைந்து
இலக்கு தெரியாத
எந்திர வாழ்க்கை
தொடங்குகிறது

கொஞ்சம்.... கொஞ்சமாக....


( இது என்னோட முதல் பதிவு கொஞ்சம் பார்த்து கமெண்ட்ஸ் கொடுங்க )

15 comments:

Unknown said...

dear,
nice poem.............. expecting more and more poems from u.......

regards & ever

Subash*S

J J Reegan said...

//dear,
nice poem.............. expecting more and more poems from u.......//

நன்றி சுபாஷ்...

சாம் தாத்தா said...

நிஜமாவே நல்லா எழுதறீங்க ரீகன்.

தொடர்க உங்கள் பணி!

சாம் தாத்தா said...

அப்புறம் இந்த Word Verification- ஐ எடுத்து விட்டுடுங்களேன்.

கமெண்ட் போட வர்றவங்களுக்கு இம்சையா இருக்கும்.

சாம் தாத்தா said...

தன்னம்பிக்கை குறித்த உங்களின் கவிகள் தொடரட்டும்.

(என் பங்குக்கு இது 3-வது கமெண்ட்.)

சாம் தாத்தா said...

தன்னம்பிக்கை குறித்த உங்களின் கவிகள் தொடரட்டும்.

(என் பங்குக்கு இது 4-வது கமெண்ட்.)

J J Reegan said...

// அப்புறம் இந்த Word Verification- ஐ எடுத்து விட்டுடுங்களேன்.

கமெண்ட் போட வர்றவங்களுக்கு இம்சையா இருக்கும். //

சரி தாத்தா...

Unknown said...

வாழ்த்துகள் ரீகன்! வலைப்பதிவுலகுக்கு வருக! வருக!

J J Reegan said...

// அருட்பெருங்கோ said...
வாழ்த்துகள் ரீகன்! வலைப்பதிவுலகுக்கு வருக! வருக! //

Thank u Arul..

ஜி said...

//இரவின் அமைதி கலைந்து
இலக்கு தெரியாத
எந்திர வாழ்க்கை
தொடங்குகிறது
//

:)) Nice one...

Aruna said...

//இரவின் அமைதி கலைந்து
இலக்கு தெரியாத
எந்திர வாழ்க்கை
தொடங்குகிறது

கொஞ்சம்.... கொஞ்சமாக.... //

Nice beginning!! welcome to the blog world..
anbudan aruna

Divya said...

Reegan,

இன்னிக்குதான் உங்க முதல் கவிதை பதிவு படித்தேன்......ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க,

வித்தியாசமான கோணத்தில் ரொம்ப அழகா இருக்கு நீங்க உபயோகிக்கும் வார்த்தைகளும் கருத்தும்!!

Divya said...

\இரவின் அமைதி கலைந்து
இலக்கு தெரியாத
எந்திர வாழ்க்கை
தொடங்குகிறது

கொஞ்சம்.... கொஞ்சமாக.... \\

இது தான் உங்க கவிதையின் 'ஹை லைட்'.......சூப்பர்ப்!!

J J Reegan said...

// Divya said...

இது தான் உங்க கவிதையின் 'ஹை லைட்'.......சூப்பர்ப்!! //

Romba Thanks Divya....

Unknown said...

hai frnd, i saw ur blog id in dhivya site. unga kita oru vishayam solanum. don't delete this comment. plz do post it in ur blog.

dhivya has steald all our writings. naanga kastapatu yosithu ezudhum stories ellam thirudi potu irukaanga.

plz refer this site. naanga elorum ezudhiya story iruku. including en vasam naan illai. she changed the title and charecters names. unga elorukum idhu theriyanumnu soli thaan am posting this.

plz neengalum indha maadhiri cheating-ku thunai poga vendam.

http://amutha.wordpress.com/2009/03/07/copying-our-stories/

indha maadhiri asingamana persons kooda irukaanganu neenga elorum therindhu kolla vendam.if u respect us plz do help us friend. becoz idhu engalin vilai uyarndha eluthu.idhai thiruda naanga anumadhika mudiyaadhu. naanga elorum evlo comments potu kooda still shez doing the same thing.

PLEASE CONSIDER OUR REQUEST